சக்தி சிறீனிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
குழலோசை!
***************
நினைத்தாலே இனிக்கும்
அந்தக் குழலோசை
தெவிட்டாது செவிகளில்
விழுந்த அந்தக்குழலோசை!
மீட்டிப்பார்க்கையில்
என்ன அனந்தம்!
சின்னஞ்சிறு வயசு
கள்ளக்கபடமற்ற மனசு
துள்ளிக் குதித்துத் திரிந்த பருவம்
அள்ளி அணைத்த
அந்தக்குழல்
பூவரசமிலைக் குழல்
அக்கம்பக்கம் வாழ்ந்த
உறவுச் சிட்டுக்கள்
போட்டி போட்டுக்கொண்டு
ஊதிய குழவோசை இன்னமும் இனிக்கிறது!
அம்மன்கோவில் பிள்ளையார் கோவில்
ஆ… சும்மா செல்லக்கூடாது
எம்மாத்திர இனிமை
அந்த வித்துவான்கள்
பக்திப் பரவசம் பொங்க
பக்கவாத்தியக் கலைஞர் புடைசூழ
நாதஸ்வரக்குழலோசை
கீதம் இசைத்த அந்தக் கணங்கள்
நினைத்தாலே இனிக்கிறது!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading