முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:237
10/10/2023 செவ்வாய்
அலை ஓசை
——————
இரவு பகல் இடையின்றி
இரையும் கடலின் ஓசை!
பரவும் கடல் பரப்பெங்கும்,
பரவி நிற்கும் இவ்வோசை!

ஓயாத கடல் அலையின்
“ஓ”வென்ற இசை ஓசை!
தாயான கடல், உடலில்
தாங்கி வரும் இவ்வோசை!

வான் மீதே உலாவந்து,
வந்தடையும் ஓர் ஓசை!
தேன் சிந்தும் தமிழோசை,
தேர்ந்து தரும் அலைஓசை!

பாமுகமும், பல பிறவும்
பகர்ந்து விடும் இவ்வோசை!
மேகமெலாம் கடந்து வந்து
மேதினி காண் இவ்வோசை!

உலக மெலாம் இருந்தும்
உடன் செய்தி தருமோசை!
அலைபேசி எனும் பெயரில்
ஆளும் இவ் அலையோசை!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading