அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853 காலைக் கதிரோனின் கண்விழிப்பு கனவுகளின் ரீங்கார நினைவு அமைதியின் விடியலில் இன்று ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள் மெல்ல...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_121

*அலை* *ஓசை* நந்திகடல் அலையின்
நாதம் மிக்க ஓசை
நானிலம் சூழ்ந்த
நாணல் புல்லின் ஓசை

மீனினம் பாடும்
நண்டுகள் கரை ஒதுங்கும்
றாலினம் துள்ளி குதிக்கும் ஓசை

சுடச்சுட அப்பா கடல் உணவு வேண்டி வருவார்
காத்திருந்து பாத்திருந்து
கறி கொதிக்கும் ஓசையுடன்
உண்டு மகிழ்ந்து அம்மாவுடன் உறவாடிய நாட்கள்

ஆச்சி மாவின் நிணலில் இருந்து
கடல் காற்று வேண்டி அலை ஓசை காதில் ஒலிக்க பலா இலையை சுருட்டி கூழ் குடித்த அந்த நாள் நினைவுகள் அலைமோதும் ஓசை

முல்லை கடலின் முழு ஓசை கேட்டு
முழுநிலா பாத்திட ஆசை
முற்றத்து மண்ணை அள்ளிக் கொட்டி அடிக்கும் அந்த வாடைகாற்றின் ஓசை மனமதில்
அலை பாயுதே!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading