தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.11.23
கவி இலக்கம் -290
ஒளியின்றி ஒளிர்வெங்கு

ஒளியெங்கும் மலர்ந்தும்
இருளெங்கும் இன்றுந் தொடருதே

வாழ்வோ கண்ணீர் போராட்டம்
சாவோ மண்ணீரில் சூறையாட்டம்
சூழல் சுமையோ சுழலோடு சுடர்
அணையாட்டம்

தீபாவளி வந்திடின் கொண்டாட்டம்
கார்த்திகைத் தீபமிடின்
குத்தாட்டம்

போரிலே மாண்டும் தோண்டி
முடியா உண்மைகளில்
தவிக்கும் மனிதருக்கோ
இது ஏன் வருகுதெனத்
திண்டாட்டம்

பட்டினியால் இறக்கும்
மனிதருக்கு ஒரு நேர
உணவழிக்க வக்கின்றி
தமிழன் தலையில் மிளகாய்
அரைக்க அண்டை நாடடில்
மீண்டும் தில்லுமுல்லாட்டம்

முடிவிலா வாழ்வில் நீதிக்குத்
தீபமேற்றினும் ஒளியில்லா
வாழ்வு வினவுதே வினாவுதே
ஒளியின்றி ஒளிர்வெங்கு
என்பதே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading