தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

காத்தா பரமானந்தன்

தீபாவளி!

இல்லமும் உள்ளமும்
இன்பத்தில் மலர்ந்திருக்க
அல்லவை போக்கியுமே
ஆவளியாய்த் தீபமேற்றி
நல்லோர்கள் காட்டிய
நன்நாளாம் தீபாவளி!

மத்தாப்புச் சிதறலாய்
மகிழ்வது அணைத்திருக்க
புத்தாடை பட்சணங்கள்
போகமாய் நிறைத்திட
கொத்தாக உறவுகூடி
கொண்டாட்டம் போடும்
வித்தார விழாவாய்
விருந்திடும் தீபாவளி!

அரக்கரரின் போர்வதைகள்
அகிலத்தில் ஒழிந்தே
அமைதிப் பூங்காவில்
அன்பினை விதையாக்கி
ஆனந்த அறுவடையில்
அனைவரும் கொண்டாடுவோம்
அலோலமாய்த் தீபாவளி!

கீத்தா பரமானந்தன்06-12-23

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading