மனோகரி ஜெகதீசன்

நீரழிவு

மின்னும் மனதில்
சீனி தின்னுமாசை
பின்னுமதுவும் இன்னும்
நோய்கள் பலதை
கண்ணும் இழக்கும்
கருவிழிப் பார்வை

சிறுநீரும் அடிக்கடி
சிந்திக் கழியும்
சிறுநீரகமும் பழுதுகள்
பலவும் காணும்

அங்க அறுப்பும்
அடிக்கடி நிகழும்
ஆறாப் புண்ணும்
அலங்காரம் செய்யும்

உடலும் தேயும்
உணர்வும் மழுங்கும்
கடனே எனவாழக்
கசப்புக்களே உதவும்

முத்திப் போயின்
முடக்கிப் போடும்
சக்திச் சரிவால்
சகலதும் அடங்கும்

தித்திப்புத் திணிப்பை நிறுத்தி
பத்திய உணவையே
பசிகெடுத்து
நித்தியம் உடலுக்குப் பளுவில்லாப் பயிற்சி கொடுப்பின்
குத்திக் கிழிக்காது சீனி வியாதி
கத்திச் சலியாது தற்காப்போடு உனைப்பிணை
தந்திர மடங்கி சாயுமதன் தொடர்வினை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

பதியவில்லை

தற்காப்பு நிகழ்வே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading