ஜெயா நடேசன்

சந்தம் சி்ந்தும் சந்திப்பு வாரம் -28.11.2023
கவி இலக்கம்-244
எச்சம்
விலங்குகளின் எச்சம்
மரங்களுக்கு உரமானதோ
போராளிகளின் எச்சங்கள் புதை குழிகளில் தோண்ட தோண்ட எச்சங்களாக எடுக்கின்றனரே
ஆதி கால ஆவணங்கள் மண்ணில் புதையுண்டனவே
இன்று அடையாளச் சின்னங்களாக
அகழ் ஆராச்சியில் எச்சங்களாக மீட்கின்றனரே
எகிப்திலே புதைக்கப்பட்ட அரசர் அரசிகளின் உடல்கள்
அழியாத ம்ம்மி உருவங்களின் எச்சங்களாக ஆய்வில் இடம் பெறுகின்றனவே
மானிட எச்சம் பல வரலாறு கூறுமே
மாவீர்ர்கள் எச்சம் காவியம் படைக்குமே
வரலாறு படைக்கும் எச்சங்கள இன்றும் தாயக மண்ணிலே மறைந்து கிடக்கின்றனவே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading