தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பசி….
பாகுபாடு பலவாகிப் படர்கின்ற பசுமை
பாரையே பாடாகிப் படுத்துகின்ற வலிமை
உணவாகி பலவாகி உயர்வாகி உழலும்
ஊற்றெடுத்து பாய்கின்ற நதியாக உழலும்
பசியெனும் ஒற்றைச் சொல்லில் ஒடுங்குமே உலகு
அற்றைப் பசிபோக்கும் அனுதினமாய் சுழலும்

வழிதேடி வரட்சி கொள்ளும் வற்றாத தொடர்பு
வலிமைக்கு வடமான
வாழ்க்கையின் ஏடு
வறுமைக்கு தேய்மானம் எழுதிடும் நாடு
வளங்களும் குன்றிடும் வாட்டிடும் போதும்
நிலங்களும் தரிசாகும் நிதர்சன வாழ்வு
உழைப்பெனும் அச்சாணி உரமது குன்றும்
உயர்வெனும் மூலதனம் உரமின்றி அஞ்சும்
தரணியெங்கும் தளர்வுநிலை தக்கபடி வளரும்
பசிபோக்கும் பண்பியலில் பகுத்தறிவு வளரின்
பாரினிலே படர்ந்திடும் பசுமையின் புரட்சி
பலநூறாய் வளர்ந்தோங்கும் பற்பல முயற்சி!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading