Selvi Nithianandan

நாட்காட்டி (495)

நாளும் காட்டியே
நலிந்ததே உனதுருவம்
நாட்களை ஒருங்கிணைத்து
நடக்கும் முறையாகும்

மாதங்கள் பன்னிரண்டாம்
மாண்புறவே வருகின்றாய்
மார்கழியில் முடிவதாலே
மகிழ்சியின் நிகழ்வாகும்

காகித நாட்காட்டியும்
கணனி மாற்றமாகும்
கலண்டே கலண்டரின்
ஆங்கில வடிவாகும்

நாட்கள் வாரங்களாகி
மாதங்கள் வருடமாகும்
பலவகை நாட்காட்டி
பாரினில் சிறப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading