ரஜனி அன்ரன்

“ சுனாமி “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 28.12.2023

பிரளயத்தின் பினாமியே
பிரபஞ்சத்தை உலுக்கிய சுனாமியே
ஆழிப்பேரலையாகிச் சீறி
ஊழித் தாண்டவமாடி
அசுரப் பசியினைச் தீர்க்க
இலட்ச இலட்சமாய் உயிர்களையும் குடித்து
ஏப்பம் விட்ட சுனாமியே
நீ ஒரு பினாமியே !

காலாற நடந்த இடங்களைத் தளங்களை
காதலர்களின் உறைவிடங்களை
கடலோடு கதை பேசியவர்களை
கிளிஞ்சல்கள் பொறுக்கிய சிறார்களை
கரைவலை இழுத்தவர்களை கட்டுமரங்களை
கடலே தஞ்சமென வாழ்ந்தோரையும்
வாரிச் சுருட்டிச் சென்ற சுனாமியே
நீ ஒரு பினாமியே !

கடலடியில் இருந்து பேரலையாய் பாய்ந்து
உயிரினைக் குடித்தாய்
உடமைகளைச் சிதைத்தாய்
உணர்வினைப் பறித்தாய்
ஏப்பமும் விட்டாய் இன்று அமைதியாகி. விட்டாய்
இனியும் வந்துவிடாதே இன்னுயிர்களைப் பறித்துவிடாதே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading