முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம்
வியாழன் கவிதை
பொங்கும் உளமே தங்கும் தையே
*********
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை அருளோடு
பானனையிலே பால்பொங்கி வழிய
புத்தரிசி போட்டு புதுப்படையல் படைத்து
மித்திரனுக்கு வணக்கம் மிகுக்கோடு செலுத்தி
உற்றார் உறவுகள் உணர்விலே ஒன்றாகி
சுற்றமும் சூழ சுவைத்து மகிழ்ந்து
பற்றுடனே பாரினிலே பைந்தமிழும் வளர்ந்திடவே
வற்றாத ஊற்றாகி வளர்த்திடும் தலைமுறை
தலைமுறையாய்த் தக்கவைப்போம் தைத்திருநாள் மகிமைகளை
நிலைகொள்வோம் நிம்மதி நிச்சயமே தைபிறந்தால்
வழிபிறக்கும் என்றேதான் வாழ்த்துகள் கூறிடுவோம்
வலிநீங்கி வசந்தம் வாழ்வினில் வீகட்டும்
பழிவாங்கும் எண்ணம் பறந்தோடிப் போகட்டும்
விழித்திருப்போம் வீண்வம்பு வேண்டாமே பொங்கட்டும்
உள்ளம் எல்லாம் உதயசூரியன் ஒளியினிலே
வெள்ளம்போல் பெருகட்டும் வளங்கள் எல்லாம்
தைமகள் தரணியில் தங்கிட வேண்டும்
பாமர மக்களும் பயன்களும் பெற்றிடவே!
கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்
கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments