இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 221
கைக்குள் கையாய் கைத்தொலைபேசி

கைக்குள் அடங்கிவிட்ட கைத்தொலைபேசியே
இக்கட்டான நிலையிலும் கரம் கொடுப்பாய்
எம்மை உனக்குள் அடக்கி வைத்து
தன்னிலை மறந்து போக வைப்பாய்

கைக்குள் அடங்கி விட்டாலும் இருந்த இடத்தில்
உலகை சுற்றி வர உதவுகிறாயே
உன் சேவையோ மிகப் பெரியது
ஆனாலும் எம்மை சோம்பேறி ஆக்குகிறாயே

மனைவி மக்களை பிரிந்தாலும் உன்னை பிரிவேனோ
புதிய துணையாய் என்னுடன் வாழ்கிறாயே
ஒருநாள் பிரிவாயென தெரியும் எனினும்
இன்னொருவர் மகிழ்வுடன் வருவாரே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading