28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
பாலதேவகஜன்
பிள்ளை கனியமுதே
பெரு வரமாய் நீ! பிறக்க
மெருகியதே என் வாழ்வு
கருகியெனி போகமாட்டேன்
உனதன்பில் உருகினின்று
உயிர் வாழ்வேன்.
கனவுக்குள் நான் வாழ்ந்த
காலங்களை கரைத்தவளே!
உன் கனவே நானென என்
கரங்களில் தவழ்பவளே!
என் காயமும் தியாகமும்
உனக்காகவே தானம்மா!
உன் மழலை குரலாலே
குறுகிய என்பெயரை
குறுக்கி நீ கூப்பிடும்போது
மீண்டும் மீண்டும் நீ
கூப்பிட வேண்டுமென்று
வேண்டுமென்றே கேட்காதவனாய்
நடித்துக்கொண்டேயிருப்பேன்.
அந்த ஒற்றை குரலை
என் வாழ்நாள் முழுவதும்
நான் கேட்டிட வேண்டும்.
உன் பிஞ்சு கால்களால்
நீ என் நெஞ்சை
உதைந்திட்டபோது
நான் உணர்ந்த இன்பம்
இவ்வுலகினில் வேறெங்குமில்லை
என் செல்ல கண்மணியே!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...