சுமித்ரா தேவி

கவி இலக்கம் 2
தமிழ் மொழி
அழகின் குரலாய் ஒலிக்கும்
ஆண்டவன் தந்த சுவையே
காதல் செய்ய
கவிதை தந்தவளே
கனவிலும் தவழும் உணர்வே
இதயம் கவர்ந்த
இன்னிசை மொழியே
கார் குழலின் காவிய இசையே
காதல் மடலாய் பிறக்கும் கவியே
தெவிட்டா தேனாய் இனிப்பாய் நீயே
தென்றலாய் நீயும் வந்தாய் இங்கு
கவிஞனாய் என்னை உயிர்பித்தாய் நீயே
தமிழ் தான் உன்‌ அழகிய பெயரோ
சுமித்ரா தேவி
‌‌‌‌ கொழும்பு

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading