பாலதேவகஜன்

ஊக்கம்

உயர்வுக்கு உயிரானது
எம் நலனுக்கு உணர்வானது
அதை விடுத்து நின்றால்
எம் வாழ்வே வீணானது.

ஊக்கத்தோடு எழுந்தவன்
உயர உயர பறக்கின்றான்
ஊக்கமின்றி இருப்பவன்
உறங்கும் நிலையில் வாழ்கின்றான்.

ஆக்கமான ஒரு செயலை
ஊக்கம் தானே செய்கின்றான்
தாக்கமான பலர் நிலையை
ஊக்கம் தானே மாற்றுகின்றான்.

சாக்கு போக்கு சொல்லி சொல்லி
சலித்து நின்றது போதுமடா
என் நோக்கம் இதுவேயென
நீ நகர்திடவே ஊக்கம்
தானகவே உன்னில் நுழைந்திடுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading