தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

பூக்களின் புது வசந்தம் கவி இல(128) 11/04/24

பூக்களின் புது வசந்தம்

உதயங்கள் தேடும் இதயங்களில்
வண்ண வண்ண மலர் வனமாய்
பாரெங்கும் பரந்திருக்கும்
பூக்களின் புது வசந்தம்

வானத்து வானவில்லின்வண்ணங்கள்
எம் சிந்தையை மயக்க
சுகந்த வாசம் எங்கும் நிறைந்து
எம்மை ஈர்க்க

மலர்களை சுற்றி ரீங்காரமிட்டு
தேனுண்டு மதிமயங்கும்
பொன் வண்டுக் கூட்டங்களும்
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளும்

கொத்துக் கொத்தாய்
அடுக்கடுக்காய்
பூத்துக் குலுலுங்கும்
மலரினங்கள்

பூமிக்கு அழகாய்
சரங்களாய் மாலைகளாய்
பெண்களின் தலையில் ஒய்யாரமாய்
அர்ச்சனை மலராய் புது மலர்கள்
இறை பதம் அலங்கரிக்குது
வசந்த மலர்களாய்
நன்றி வணக்கம்்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading