வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
அன்னையும் தந்தையும்….
அவனிப் பேரழகை
அவதார வாழ்வழகை
உவகை நிறை உள்ளத்தின் செயலழகை
வாகை நிறை வாஞ்சையுடன்
வரமாகத் தந்தோர்கள்
வரம்பிட்டு வாழ்வறத்தை விதைப்பிட்ட வரமான பெற்றோரே
சான்றோராய் ஆன்றோராய் சாதுரியம் மிக்கோராய்
வென்றுயரும் வேள்விக்கு புடமிட்ட பொன்னாகி எமக்காக வாழ்ந்தவர்கள்
ஏற்றத்தின் ஏணிகளே அன்னையும் தந்தையுமே ஆலயத்தின் பேரொளியீர்
வரமாகப் பெற்ற பேறு வையத்தின் பெருமைப்பேறு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading