வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நிர்மூலம்…
கனதி குன்றிட
காயங்கள் ஆறிட
வலிகள் அகன்றிட
வருமா வழியொன்று
வரமாய் கேட்டாலும்

அன்றைய நிர்க்கதி
அழிவுற்ற பேரவலம்
நிர்மூலம் கோலங்கள்
நீள்கிறதே நெடும் தொடராய்
நித்தமும் பெருவலியாய்

மே பதினெட்டில்
மீட்பற்ற நிர்மூலம்
ஊர் பேரற்ற உபாதையின்
நிர்மூலம்
வரலாறு தொலைத்த வலிகளில் நிர்மூலம்
வாழ்வின் அவதியில்
உறவுகள் இழப்பில்
வறுமையின் சுவட்டில் நிர்மூலமாகி ஏதிலி வாழ்வின்
இடரின் பிடியில்
நிர்மூலமாகிய தமிழின வாழ்வு
தளிர்க்குமா தடைகள் உடையுமா.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading