நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

திறனின்மேன்மை தீட்டும் குழந்தைகளே…..,,,

இரா.விஜயகௌரி

வரமென வாய்த்த வழித்தோன்றலிவர்
வைகறை விடியலில் ஆதவப் பேரொளி
நித்தியம் மலரும்நிமிர்ந்தெழும் ஆளுமை
வல்லமை நிறைந்த வைகறைக்குயில்கள்

பேதமை களைந்த பெருவெளிச்சங்கள்
பேணிக்காத்திடின் வல்லமைச்சுடரொளி
விடியலை எழுதிட வலிந்தெழும் கரங்கள்
வேண்டிக் காத்திடுயர்ந்தெழும் தோழமை

கடவுளின் கரங்களில்கரணையின் மனுக்கள்
காத்திரம் நிறைத்த சூத்திர தாரிகள்
அறிந்தால் புரிந்தால் அறிவின் பொக்கிஷம்
தெளிந்தவர்கண்களில். தேவதை வடிவம்

செயற்திறன் மிக்கசேவையின் மைந்தர்
பாமுகப் பந்தலின் பரவசத் தூதுவர்
கள்ளம் கபடம் இல்லாத மானிடர்
உணர்ந்து உரைத்தால் உயர்வின் திறனிவர்

Nada Mohan
Author: Nada Mohan