எதிர்காலம்

நேவிஸ் பிலிப் கவி இல(137) 13/06/24

பெற்றிட்ட வாழ்வுதனை
பொற்காலமாக்கிடவே
கடந்த கால கசப்புக்களை
ஓரமாய் ஒதுக்கிடுவோம்

இருள் தந்த வினைகளை
சிந்தித்துப் பயனில்லை
வெளிச்சத்தை நோக்கிடுவோம் -அங்கே
ஒளிர்ந்திடும் பாதையொன்று

புத்துலகம் படைத்திடவே
அனுபவ அறிவும் புரிதலில் தெளிவுமாய்
தடைகளைத் தகர்த்து
துணிவுடன் நடந்து

நானிலம்எங்கும்
நற்பாதை அமைத்து
செப்பனிட்ட பாதையிலே
நடந்திடும் போதினிலே

உண்மை அன்பு மலர
உறுதியாகும் நம்பிக்கை
மனதிலே நிம்மதி
எதிர் காலம் நலமாகும்
வாழ்வெல்லாம் வளமாகும்.

நன்றி வணக்கம்…..

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading