10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 276
13/08/2024 செவ்வாய்
பருவம்
————
இயற்கையின் பருவம் நான்கு!
இளவேனில் என்பதும் ஒன்று!
நினைக்க இதுபோல் நன்று,
நிலமதில் உண்டோ சொல்லு!
கோடை என்ற பருவம்-இதில்
கொப்பளம் கண்டிடும் சருமம்!
ஆடையும் கேட்கும் விடுமுறை,
அதற்கு இல்லையே படிமுறை!
இலையுதிர் பருவம் துன்பியல்!
இதுவோ இயற்கை உளவியல்
அலைமிகு ஆழிசூழ் உலகதில்
ஆழமாய் பதியும் வாழ்வியல்!
குளிர்மிகு பருவம் இதுவென்று
குறிப்பிட வேண்டுமா சொல்லு
தளிர்களும் தடைப்படும் முறையின்றி
தரணியும் உறங்கிடும் தடையின்றி!
வேறு
பருவத்தே பயிர்செய் என்று,
படித்தவர் சொன்னார் அன்று!
புருவத்தை உயர்த்தா தின்று!
புரிந்து நீ நடப்பது நன்று!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...