க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 277

வலி

வேதனைகளின் எதிர்
ஒலி வலி
நினைவுகளின் கசப்பு
மனது களின் வலி
உடகளின் சேதாரம்
உண்டாக்கும் வலி
பருவத்தின் மாற்றங்கள்
பகரும். வலி
ஜனனத்தின் வரவு
மகிழ்வோடு வலி
இறுதி மரணத்தின்
விடைபெறும் வலி
பார்த்திட முடிந்த
வலிகள்
பார்த்திட முடியா
வலிகள்
வலிகள் உண்டாக்கும்
புலப்பல்கள்
மாற்றங்களை தேடி
யாத்திரைகள்
மருந்துகளை. தேடி
யாசகங்கள்
ஊகங்களும் சிபாருகளும்
நிவாரணியாகுமா?

இந்த வலிகளுக்கு

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan