மாற்றம்

கெங்கா ஸ்ரான்லி

வாழ்க்கையில் தான் எவ்வளவு மாற்றம்
இளமை தொடக்கம் முதுமை நிலைவரை
எய்யும் வரையான மாற்றங்கள்
30 வருடங்கள் முன்பு வாழ்ந்த வாழ்க்கை
இப்போ 35. வருடங்கள் இங்கு வாழும் வாழ்க்கை
முந்திய வாழ்வு வறுமை எனினும்
பாசம் நேசம் கொட்டிக் கிடந்தது
இப்போதைய வாழ்வு வளம்இருந்தும்
நிம்மதி இல்லை அதில் ஒன்றுமேயில்லை
ஆடம்பர வாழ்வே தவிர
அங்கு அன்பு பாசம் இல்லை
ஓடுகிறார் ஓடுகிறார் பணத்திற்காக
உழைப்புத் தேடி
வாடுகிறார் வாடுகிறார் உணவின்றி வனப்பின்றி
ஆடுகிறார் சதிராட்டம் சதுரங்க விளையாட்டாய்
போடுகிறார் பலவேசம் பொதிய மரநிழலில்
ஏனிந்த போராட்ட மாற்றம்
மறக்கடிக்கும் மனிதம் நேர்மை
மாற்றத்தால் பெற்று விடும் மேன்மை
மாற்றம் வருவது நல்லது
மக்கள் சுபீட்சம் பெறவேண்டும்
குமுகமும் சிந்தித்து செயல்பட வேண்டும்

Nada Mohan
Author: Nada Mohan