கவிதை நேரம்-19.09.2024 கவி இலக்கம்-1917 சாளரத்தின் ஒளியினிலே ———————-

Jeya Nadesan

கவிதை நேரம்-19.09.2024
கவி இலக்கம்-1917
சாளரத்தின் ஒளியினிலே
————————–
சிறைப்பட்டிருந்த செங்கதிரோன்
தன் கதிர்களை கீழ் திசையில் எழுப்பி
உலகிற்கு ஒளி தருகின்ற வேளையில்
காலை உதயத்திலே சாளரத்தின் ஒளியினில்
அகல விரித்து திறந்து வைக்கையில்
மெல்லிய குளிர் காற்றும் மேனியில்
இதமாக மனதிற்கு உற்சாகமானதில்
வாழ்வின் விடியலில் நிலையான ஒளியினில்
பறவைகள் பறந்து இரை தேடி அலைவதில்
காகங்கள் கரைந்து கூட்டமாக செல்கையில்
மொட்டு மலர் மலர்ந்து ஐன்னல் ஓரத்தில்
சிட்டுக் குருவிகள் சாளரக் கதவினில்
தானியங்கள் யன்னலால் வீசி எறிக்கையில்
கோயில் மணி சாளரக் கதவினில் ஒலிக்கையில்
இல்லறத்தை நல்லறமாக்கி மகிழ்கையில்
இனிமையுடன் நிரந்தரமாய் வாழ்க்கையில்
ஒளியின் விடியல் மகிழ்வில் நாம் மலர்கையில்

Nada Mohan
Author: Nada Mohan