அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2029!

சாளரத்தின் ஒளியினிலே..!

கட்டாந்தரையில் குளிரின் மடியில்
விட்டத்தை வெறித்தே பார்த்தபடி
தூங்கிய அந்தக் காலங்களிலெல்லாம்
தூக்கம் அப்படிக் கண்களைத் தழுவின..

பஞ்சு மெத்தையில் பகட்டு வாழ்வில்
துஞ்சுவதற்கே அஞ்சுகின்ற காலம்
நோயென்றும் துயரென்றும் வந்து
நொந்த உடலைக் கொன்றுவிட..

அப்பப்போ சாளரத்தின் வழியே விழி
அப்பப்பா எதைத்தான் தேடுகிறதோ
பட்டுப்போன வாழ்வு துளிர்க்குமா
பட்ட மரங்கள் இலை நிறைக்குமா..

இருளின் பிடி விலக ஒளி புகுமே
அருளும் சாளரமே உன்னூடாய்
எத்தனை காட்சிகள் உள்ளேக
அடைபட்டுக் கிடந்த இதயமும் திறக்கிறதே…!
சிவதர்சனி இராகவன்
19/9/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading