மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத்தலைப்பு

உயிருள்ள பொம்மைகளே!
உருவேற்றும் சீருடைச் சிட்டுக்களே!
எங்கள் கருவீணாச் சேய்களே!
கனவைச் சுமக்கும் தேர்களே!

தாயாக்குகின்றீர் எம்மை
தயாராக்கச் செய்கின்றீர் உம்மை

காயான நீவிர்
கனியாகிக் கனிய
சாயாது தேடலை
நாலெளாம் நிகழ்த்தி
ஓயாதே உழைக்கின்றோம்
ஒவ்வாமை கழற்றி
தேயாது வளர்ந்தே
பெறுவீரே பெற்றி.

பட்டாம் பூச்சிகளாய்ப் பரவசச் செட்டை
பூட்டிப் பறப்பீர்
ஒட்டடை போன்றும்
ஒட்டி இருப்பீர்
கட்டுக்காவலை வெட்டியும்
கச்சேரி பண்ணுவீர்
சாட்டுக்களைத் தூவியும்
சங்காரம் செய்வீர்
சரடு திரித்தும்
சதிராடி வெல்வீர்
பட்டம் சூட்டுவீர்
பட்டாங்கும் தீட்டுவீர்

குழுக்கூட்டை விரும்புவீர்
பழுக்கூடின் சுருங்குவீர்

விபரீதம் அறியாது
விளையாட்டுக் காட்டுவீர்
அபவாதம் அண்டின்
அழுது புலம்புவீர்

படும்பாடுகள் கொஞ்சமல்ல
பட்டியலிடின் பரிதாபமே மிஞ்சும்

வேம்பென எண்ணிக்
கற்றகவும் மறுப்பீர்
சோம்பலால் சுருள்வீர்
சொற்பிழையும் விடுவீர்
உம்பலம் அறியாமலே
உருகி ஊசலாடுவீர்
கம்பு காணின்
கட்சி மாறுவீர்
நம்பிக்கை பிறக்கின்
நன்றாயே துலங்குவீர்

அன்பாலே ஆராதிப்பீர்
அண்டையில் அமர்ந்திருப்பீர்
பூச்செண்டும் பிரிசளிப்பீர்
பொன்னாடையும் போர்த்துவீர்

வாடிக்கை இதுவுமக்கு
வம்புவழக்கு எமக்கு

ஏட்டுடன் சாட்டையை
மட்டுமா தொட்டோம்
கட்டுக் காசுக்காய்
எதையெதை விட்டோம்

அந்தரங்க சுத்தியே
ஆழ்மன இருப்பு
அடைவு மட்ட
உயர்வே விருப்பு

அதற்கானதே எங்கள்
ஆசிரிய முயற்சி
அதனால் கிட்டும்
மாணவர் உயர்ற்சி

இணைப்பாட விதானத்தையும்
இருத்திப் பொருத்துகின்றோம்
அணைத்தே அனுபவத்தையும்
அண்டச் செய்கின்றோம்
பிணைத்தே செயன்முறையைப்
பிசகின்றி எய்கின்றோம்
இணைந்தே ஏறுமாறின்றி
இதயத்தால் இயங்குகின்றோம்

ஆடிக் கறக்கும்
ஆற்றல் இருக்கு எமக்கு
கூடி உறவாடிச்
சூட்டிச் செல்வோம்
மகுடம் உமக்கு

விடுமுறைக் காலங்களிலும்
விடுபடுவதாயில்லை
உம்நினைப்பு
விந்தையே ஆசிரிய
மாணவப் பிணைப்பு

விடுபடத்தான் தருகிறார்களோ
கட்டாய ஓய்வு

கொடுப்பதற்காகத்தான்
காத்திருக்கின்றதோ
நாற்காலிச் சாய்வு

கொடுபடும் வேலைத் திணிவு
கொடுக்கலாம் எமக்குக் களைப்பு
ஆனாலும் கொள்வதில்லை
உம்மீது வெறுப்பு

ஊறுபாடு எதற்கும்
நாமே பொறுப்பு
உருவாக்கத்தில் கொள்ளவில்லை
ஒருபோதும் அருவருப்பு

காத்திருக்கும் உங்கள்
கருவிழி அழைப்பு
பூத்திருக்கும் உங்கள் புன்னகைச் சுவடு
கூத்திடவே வைக்குது
குடைச்சலைப் போக்குது

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading