கீத்தாபரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
உயிர்க்கொடை!

ஊருக்காய் உறவுக்காய்
உருகிய மெழுகுகள்!
பேர்சொல்லி வாழ்வதற்காய்
பிரிந்திட்டார் ஆவியினை!
தமிழன்னை பெற்றெடுத்த
தடந்தோள் வீரர்கள்!
மண்காக்க மானங்காக்க
தன்மானம் கொண்டெழுந்த
தற்கொடை ஆளர்கள்!
இன்னலில் எங்களின்
இரும்புக் கவசமவர்!

கண்மூடி நாம்தூங்கக்
காட்டிலும் கடலிலும்
காற்றாய் அலைந்தே
காவியம் வடித்தவர்கள்!
மாற்றீடே இல்லாத
மாசற்ற தங்கமவர்!
இலட்சியம் ஒன்றே
இலக்காய் வரித்து
உயிர்க்கொடை தந்தவர்கள்!
கார்த்திகை நாயகர்!
காந்தளின் நேசர்களைப்
பூத்தூவி வணங்கிடுவோம்!

கீத்தா பரமானந்தன்
25-11-24

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading