நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-290 .
கவித்தலைப்பு…..!
இதயம்
…………
ஓயாது உழைக்கும் தானியங்கி – வாழ்வில்
எதையும் தாங்கும்இடிதாங்கி!
இரத்தத் சுத்திபம்பு – இது
நின்றுவிட்டால் உயிருக்கே வம்பு!
வலது வென்றிக்கல் இடது வென்றிக்கல்
இதயம் – அதுபோல்
வடக்கு கிழக்கு மாகாணமே ஈழம்!
எங்களைப் பொறுத்து
ஈழமும் இதயமும்
ஒன்று – அட
இல்லை என்றால் அவன் சுத்த மண்டு!
உடலில் இதயப் புரட்சியின் இரத்த
ஓட்டம் – இவ்வாரே
எங்கள் விடுதலைக் காகவே சீமானின்போராட்டம்!
இதயம் இதுவே காதல் அடையாளச்
சின்னம் – நம்
இதயத்தில் தோன்றும்ஆயிர மாயிரம்எண்ணம்!
உண்மை அன்புக்கே இதயக் கதவு
திறக்கும் – பொய்
வேட தாரிகளைக் கண்டதும் திறக்க மறுக்கும்!
பெற்ற பிள்ளையைக்காக்கத் தன்னையே
கொடுக்கும் – இதயம்
துடிக்கும் வரைக்கும்உடலில் உயிரானதுஇருக்கும்!
பரந்த இதயமே உலக உயிர்களை
நேசிக்கும் – தூய
இதயமே இறைவனை சுவாசிக்கும்!
எங்கோ துடிக்கும் எங்கள் தலைவனின்
இதயம் – உறுதியாய்
மீண்டும் பிறக்கும் எங்கள் ஈழமண்ணில் உதயம்!
.ஆசிரியை ;
அபிராமி கவிதாசன்.
17.12.2024
