சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய். “பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகியின் வடிவில்
யோகியின் ஞானம்

தையொன்று எமக்காய்
தையலின் வடிவில்
தளிரொன்றின் வரவாய்
தரணியில் மலர்ந்திடும்

விடிந்திடும் விடியலுள்
வியந்திடும் நிகழ்வாய்
அனலொன்றின் மத்தியில்
எரிந்திடும் துயரங்கள்

பொங்கிடும் பொழுதுகளில்
பொழிந்திடும் வேளைகளில்
புதிதாய்ப் புனலொன்று
புகுந்திடும் நேரமிது

போகிப்.பொங்கலுக்கு
பொழிந்திடும் வாழ்த்துகளாய்
புலர்ந்திடும் வரிகளேயென்
பாசமிகு வாழ்த்துகளாய்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading