சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296 விருப்பு தலைப்பு. சலசலக்கும் ஆற்று நீர் 
சங்கமிக்கும் பூங்காற்று 
சத்தமில்லாதோர் மாலையிலே 

யுத்தம் மட்டும் உள்ளத்தினுள்ளே 
நினைவுகளின் வெள்ளத்தில் 
நீந்த முடியாமலே 

மூழ்குகின்ற பொழுதுகள் 
சயனத்தின் போதும் 
சத்தமில்லாமலே 

முளைக்கின்ற முரண்பாடுகள் 
வாழ்க்கை என்னும் பயணம் 
விளிம்பு வரையும் தூங்கிக் கொண்டே !

வளைந்து செல்லும் பதை 
விளைவுகள் வினைதானோ ? 
விதைத்ததை கிளறிப் பார்ப்பதோ ?

எதை நினைத்துப் புலம்பினாலும் 
அதனோடு தான் முடிவு 
எதை வெளுக்க இங்கு சுய அலசல் ?

எதனோடு உறவு கண்டு 
இதனோடு கலந்து விட்டாய் 
இப்போதும் கூட தப்பான
தாளமென்றால் ?

விளக்க முடியா 
வினாடிகளுக்குள் 
விழுந்து விட்ட 

விட்டில் பூச்சியின் சத்தமில்லா 
ஓலமிது கேட்கிறதா ?
இல்லை அது வெறும் கூச்சலோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading