அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

காதல் காதல்

சொல்லத் துடிக்கும் உதடுகளும் சொல்லாமலிருக்கும்
சொல்லாமலே இதயம் காதலைப் பருகும்
மொழியும் இங்கே மவுனம் காத்திடும்
விழிகளின் பேச்சால் காதலும் பூத்திடும்

இவன் அவளுக்குள் தொலையாமல் தொலைவான்
அவள் இவனுக்குள் தொலையாமல் தொலைவாள்
இதயங்கள் ஒன்றையொன்று இடமாற்றம் நிகழும்
உதயமாம் காதலில் இரவில்லாப் பகலும்

மனம் பூஞ்சோலையாக பட்டாம்பூச்சிகள் பறக்கும்
கணம் ஒவ்வொன்றும் சுகங்களை நிறைக்கும்
பேசுவது கிளியாவென இவன் சொல்ல
கூசவும் இவள் தலைகுனிவாள் மெல்ல

எத்தனை சொந்தங்களிருந்தும் விரும்பிய சொந்தமாம்
சித்தமும் மீட்டிடும் காதலின் சந்தமா ம்
அவளுக்கு பிடிக்காததை இவனோ தவிர்ப்பான்
அவளும் அவனின் அருகாமைக்காய் தவிப்பாள்

சீவனுக்குள் சீவன் செருகிவிடும் புதுமை
நாவதனில் கொஞ்சுகின்ற மொழியூட்டும் இனிமை
இந்நொடி நீளாதோ என்கின்ற தன்மை
வந்துவிடும் காதலித்தால் அனுபவித்த உண்மை

ஜெயம்
10-02-2025

Nada Mohan
Author: Nada Mohan