சிவரூபன் சர்வேஸ்வர்ய்

முகமூடி
ஃஃஃஃஃ

அகமனம் என்றும் அழகாக இருந்தால் //
புறமும் அழகானதே புரிந்திடு நண்பா //
மாயவலைகள் இன்று மனிதம் தொலைக்கும் நபர்கள் //
முகமூடி மனிதர்கள் முனைப்பாய் ஓர்பாசம் //
சுயநலம் கொண்டு சுதந்திரமாகவே நம்பவும் வைப்பார் //
பாவமுமறியாப் பாவிகள் பாருமேன் //
சாலமும் போடவே சந்தோசமும் அடைவார் //

உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் //
வீரவசனம் சாமி விசமாகக் கொண்டுவார் //
விசமம் அறியாமல் விரையும் கூட்டம் //
ஏமாறும் போதிலே எட்டாப்பழம் புளிக்குமென்பார் //
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே //

முட்டாளே இன்னுமா பாட்டென மறையும் முகமூடிகள் //

இன்றைய வரம்பு எங்கே வாய்மை எங்கே //

வண்ணமான நிலையுமெங்கே தொலையுதே கனவாய் //
ஒப்பனை போடும் வேடத்திலே காலமுமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading