சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சாமினி துவாரகன்

முகமூடி

ஆரா!
கவனமாய் இரு!
சுதந்திர வானில்
சிறகடித்து
பறப்பதாய் எண்ணி
அலட்சியமாய்
இருந்திடாதே!!!

கல்லெறிந்து
சிறகொடிக்கவும்
அம்பெறிந்து
உனை அழிக்கவும்
ஒரு கூட்டம்
அலைந்து கொண்டிருக்கும்
மறந்திடாதே!!!

புளுகு மூட்டைகளும்
புறங்கொள்ளிகளும்
வஞ்சகப் பிசாசுகளும்
வலை வீசிக் காத்திருக்கும்
சிக்கிண்டு விடாதே!!!

அலங்கரிக்கப்பட்ட
அழகிய குழந்தையே
ஆரா!
நீ கவனமாய் இரு!!!

முகமூடிகள்
அழகானவை!!!
வேடிக்கையானவை!!!
சிரிக்க வைத்து
சிதைத்து விடும்
வியக்க வைத்து
விழுத்தி விடும்!!!!

நுரைகள் அடங்கும் வரை
தேநீர் தெரியாது
திரைகள் விலகும் வரை
உண்மை புரியாது!!!

இளங்குமரியே
ஆரா!
கவனமாய் இரு!
அடிமை ஆகிவிடாதே!!!
ஆசைக்கு மட்டுமல்ல
அன்புக்கும் கூட………

அன்புடன் இவள்
-சாமினி துவாரகன் –
18.02.2025

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading