திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

பாதை மாறும் மானிடர்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து 27.02.25 ஆக்கம் 351

27.02.25
ஆக்கம் 351
பாதை மாறும் மானிடர்

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு
மாறாகத் திசை திருப்பி
ஏற்றியோ அல்லது
இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில்
எதுதான் முடிவோ
இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகப் பட்டு விடும்

மாற்றிய திசையில்
தேடிய பரிதவிப்பு
மாறிட புதிய பாதையில்
பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading