ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வறுமைக் கோட்டின் வரம்புகள்

வாழும் வயதிலே வதங்கும் நிலையும்
வறுமைக் கோட்டின் வரம்புகள் உயரவும்
வளத்தை தேடும் சித்திரம் அங்கு
தளத்தை உயர்வாக்கவும் தளராத துணிவுடன்
விளையும் பயிரில் முளையும் திறனாய்
அலையும் மனதில் ஆளுமையும் சேரவும்
நிலையாய் முன்னேற்றம் நிம்மதியை தருமே
நித்திலம் கவலையும் சூழ்ந்த போதிலும்
வைத்திடும் எண்ணத்தில் வரையவும் நினைத்து
புத்தியின் முயற்சி புதுமையும் படைக்கும்
ஏக்கம் தாக்கம் இயம்பிடத் தோன்றினாலும்
ஊக்கமும் உயர்வும் வருமென நம்பிக்கை

சிவருபன் சர்வேஸ்வரி

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading