ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பனிப்பாடி ( பென்குயின்)

நகுலா சிவநாதன் 1800

பனிப்பாடி ( பென்குயின்)

அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை
அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும்
நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி
வீச்சாக தண்ணீரை கிளித்துமே நீந்துவார்

பறந்திடவே தெரியாது பலமான பறவையிது
பண்பாட்டு நடைபயிலும் சிங்கார நடையழகி
மொத்தத்தில் உலகளவில் 17இனம்தானாம்
மோதுகின்ற நீரோடு வாழ்கின்ற பறவையிது

சூடாகும் வெப்பத்தால் உருகும் பனிகளும்
சுந்தரமாய் ஓடுகின்ற பறவைக்கு ஆபத்தாம்
வாழுகின்ற நீர்நிலைகள் வற்றாது இருக்கணும்
தாழ்வில்லா வாழ்க்கை பென்குயினுக்கு
கிடைக்கட்டும்

நகுலா சிவநாதன் 1800

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading