காலமே கவனி..

வசந்தா ஜெகதீசன்
காலமே கவனி…
மெளனத்தை மொழியாக்கி
மனிதத்தை விலையாக்கி
காலத்தை கருக்கிடும்
ஞாலத்தைக் கவனி!

பகிடியும் கிண்டலும்
பற்பல வலிகளும்
காலத்தை விரட்டிட
மனிதத்தை புதைத்திடும்
மாற்றத்தைக் கவனி!

சமூகத்தின் வலைத்தளம்
சங்கதி பலரகம்
நீதியின் நிர்ப்பந்தம்
நிறைந்திடும் நிகழ்வுகள்
தளரும் தன்னிலை கவனி!

எழுச்சியின் வீழ்ச்சியும்
ஏற்றத்தின் தோற்றமும்
மாயையாய் மாற்றிடும்
மனிதத்தைக் கவனி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading