ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

என்ன தான் வேண்டும்

ராணி சம்பந்தர்

எப்பவும் ஏங்கும் மனதிற்கோ
என்ன வேண்டும் சொல்லிடு
பொன் பொருள் இருக்கிறது
போதுமான பணம் வருகிறது

பின் என்ன பழையதுருளுதா
முற்றத்து நிலவில் அமர்ந்து
உண்ட சோற்றுக் குழையலா
கூட்டுவாழ்வின் தனிமையா

அகதி மண் அக்கம் பக்கமதில்
அரைகுறைப் பாஷை விளங்கி
விளங்காமலும் தேடும் சொல்
சிக்கி விக்கித் தவிக்குதா ?

தேங்கும் மனது தூங்காத
விழிகளில் என்னதான்
வேண்டுமெனச் சொல்லிடு.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading