பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

இசை (54)

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-03-2025

பிறப்பிலும் இறப்பிலும்
பின்தொடரும் முணுமுணுப்பாய்
கண்மூடித் தூங்கவைக்க
கையாளும் இசையிதுவாய்.

இருதய துடிப்பும்
இசைக்குமே கருவியாய்
மனிதனின் ஓட்டமும்
மலைக்குமே அதிர்வலையாய்

தாய்வயிற்றின் கருவாய்
தந்தபாடல் நலுங்கு
மண்ணில் உதிர்த்ததும்
மலர்ந்தது தாலாட்டு

இளம் வயதினிலே
காதலும் வீரமும்
உயிர் திறந்தபின்
ஒப்பாரி பிறக்கிதிங்கே

உயிராகவே இசை
உயர்ந்தது உலகினிலே
எதிர்கால சந்ததியும்
எண்ணியிதை இசைத்திடு!

Jeba Sri
Author: Jeba Sri