புது வருடம்

ஜெயம்

பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம் இனி நன்னாளே
மடியின் கனமும் குறையும் தானாலே

கோடையிலே பிறந்து மனமகிழ்ச்சி கொடுக்க
ஆடைகளை அழகாய் அனுபவித்தே உடுக்க
மனதிற்குள் புதுவித புத்துணர்ச்சி உண்டாக
இனமாம் தமிழர் குதூகலமாய் கொண்டாட

தமிழ்மக்கள் ஒற்றுமை ஓங்கி வளரட்டும்
அமிழ்தினுமினிய மொழி திசையெட்டும் எட்டட்டும்
கலாசாரம் பண்பாடு தலைமுறைக்கும் நீளட்டும்
விழாக்கானும் புத்தாண்டு அனைத்தும் அருளட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading