அறிவின் விருட்சம் (711)

செல்வி நித்தியானந்தன்

அறிவின் விருட்சம் (711)
உருண்டோடும் உலகிலே உதவிடும்
ஊக்கத்துடன் உற்சாகம் தரும்
உன்னத வாசிப்பே அரியதொரு
உவகையின் பொக்கிசமே ஆகும்
பெற்றவர் பிள்ளைகள் இணைப்பு
பெற்றிடும் தலைமுறையும் சிறப்பு
பேணியே காத்திடும் விருப்பு
பேருடன் செயலாக்கம் பிணைப்பு
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி
நம் உணர்வுகளை மீட்டும் தேர்ச்சி
நன்மை தீமை பகுப்பாயலே முயற்சி
நானிலத்தில் வந்ததே தினத்தினுயர்ச்சியே

Nada Mohan
Author: Nada Mohan