: அலை:

: : செல்வி. நித்தியானந்தன்
அலை

கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும் அலைமோதும்
: விடுமுறை என்றாலே
நெரிசல் அலையாகும்
விதிமுறை மறந்தாலே
விரிசல் நிலையாகும்
ஆடையின் வர்ணமும்
அழகு அலையாகும்
பாடையின் முடிவும்
அலையின் கூட்டமாகும்
விடியலின் அலைவு
உரமான எழுகையாகும்
உந்துசக்தி உதிரத்தின்
உறவின் அலையாகும்
: செல்வி. நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan