அலை

ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு
தலைவிரித்தாடினால் தாங்காது இந்தஉலகு

விரிகுடா வளைகுடா எங்கும் இதனாட்சி
திரிந்தாலும் ஆர்ப்பாரித்து அழகின் காட்சி
அலையுச்சி வகிடெடுக்கும் வெண்ணிலவே சாட்சி
கலைகளாக அலைகளை வரைந்திட்ட மாட்சி

கரையினை அடைந்து தீர்த்திவிட தாகம்
விரைந்துமே கொடுத்திடும் முத்தத்தின் வேகம்
அப்பப்பா காதலைச்சொல்ல கரைதாண்டும் தன்மை
இப்போது தரைக்கு தெரிந்தது உண்மை

அலைகளை பார்க்க பார்க்க ஆனந்தம்
நிலையான கவலையை தீர்த்திடும் அற்புதம்
கடற்கரையோரத்தில் நுரைதள்ளி அலை திரும்பிடும்போது
படைத்திட கவிதையை தட்டுப்பாடும் ஏது

Nada Mohan
Author: Nada Mohan