மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்…
அறிவின் விருட்சமே…
அறிவூட்டும் வித்தகமே
அனுதினமும் புத்தகமே
வரலாற்றுப் பொக்கிசமே
வார்ப்பாகும் நூல்த்தேட்டம்
சரிதத்தின் சான்றுரைக்கும்
சமகால படைப்பாகும்
எண்ணத்தின் சிந்தைகளை
ஏற்றமுற வார்ப்பாக்கும்
பிள்ளைகளின் கல்விக்கு
பெருவிளக்காய் ஒளியேற்றும்
அறிஞர் குழாமை அனுதினமும்
உருவாக்கும்
அடித்தளமே நூல்த்தேட்டம்
அவரவர்க்கு கற்றறிய அரிய நூல் பலவாகும்
பள்ளியிலே பலர் பயில
பாடத்தின் வகையாகும்
சொல்லின் நயத்தோடு
மொழியின் வேராகி
அறிவின் திரட்டலை
அடக்கமாய் பிரசவிக்கும்
அறிவின் விருட்சமே
வாசிப்பின் ஊக்கமே
மனிதத்தின் முழுமை
வானுயர் சரிதத்தின்
வகை வகை தேட்டமிது
சிறு சிறு பதிப்பும் காவியத்திரட்டும் கணக்கற்று
மலரும் காசினியின் ஊற்று
அறிவூட்டி நிமிர்த்தும்
அனுதினத்து விளக்கு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan