பருவம் 714

செல்வி நித்தியானந்தன்

சித்திரையில் வந்துவிட்ட பருவம்
முத்திரை பதித்திடும் உருவம்
எத்தரை பார்க்கினும் தாயுருவம்
பத்தரை மாதத்து தங்கமாகும்

நாட்டுக்கு நாடு பலமாற்றம்
நானிலமும் பலதும் தடுமாற்றம்
நாலபுறமும் சிதறிய கூட்டம்
நாடியே வந்திடும் நினைவுநாளாம்

பாவக் கணக்குகளை குறைப்பதும்
நற்கணக்கினை பலதாய் அதிகரிப்பதும்
ஆலயங்களில் கஞ்சி ஊற்றுவதும்
அவனியில் அன்னைக்கு நன்றாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading