வர்ண வர்ணம் பூக்கள்

நேவிஸ் பிலிப் கவி இல(465)

வான வில்லின் நிறமோ ஏழு வர்ணம்
மண்ணில் பூக்கும் மலர்களோ ஏராளமாய்8
பலவண்ணமாய் புரியாத புதிராய்
எம் சிந்தையை கவர்கின்றாய்

வெள்ளை நிற மல்லிகையும்
செம்பரத்தையின் சிவப்பும்
மஞ்சள் நிற செவ்வந்தியும்
வண்ணங்கள் பலவாய் றோசாவும்

வீசும் வாசம் காற்றோடு கலந்து
எம் உள்ளமெல்லம் கொள்ளை கொள்ள
உன் இதழ்களின் மென்மையால்
என் இதயத்தை வருடுகிறாய்

அரச்சனை மலர்களாய்
மலர்கொத்துகளாய் பூச்செண்டுகளய்
மண மாலைகளாய்
ஆலய மேடைகளில் அலங்காரமாய்

வண்டுகள் மொய்த்திடும் வண்ண மலர்களே
மொட்டாகி மலராகி உதிர்ந்தாலும்
மீண்டும் மீண்டுமாய்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading