ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வர்ண வர்ண பூக்களே!

நகுலா சிவநாதன்

வர்ண வர்ண பூக்களே!

புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய் விரியும் இதழ்களே!

வர்ண வர்ண நிறமுடனே
வாஞ்சை கொடுக்கும்;; மலர்களே!
எண்ணம் யாவும் நிறைத்திடுமே
எழில் அழகுப் பூக்களே!

கண்ணைக் கவரும் பூக்களே
களிப்புத் தரும் வர்ணமே
மண்ணில் விரியும் மாண்புடனே
மாற்றம் காணும் வாசப்பூக்கள்

இயற்கை தந்த வரமுடனே!
இனிதாய் மலரும் மலர்களே
இன்பம் நல்கும் மணமுடன்
இதயம் கவரும் நறும்பூக்கள்

நகுலா சிவநாதன் 1814

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading