மனிதமாய் எழு

வசந்தா ஜெகதீசன்
மனிதமாய் எழு
மாசற்ற உலகின் தூய்மை துலங்குமா
மனிதம் வாழும் புவியாய் பூக்குமா
எங்கும் சகதி நிறைந்த பாதை
எதிலும் தூய்மை விலகிய வாழ்க்கை
ஏக்கம் நிறைந்த விழிகளின் பார்வை
எங்கே தொலைத்தோம் நிம்மதி
நிஜத்தை
முட்களாய் தைக்குதே முரண்பாடுகள் பலது
செயலும் வாழ்வும் சீரற்று சிதைய
காணொளிக் காட்சிகள் கதைகளைக் காவ
புலப்படும் நிஜங்கள் உண்மையா உராய்வா
உலகே இன்று போரின் வதையில்
உலுக்கும் செய்திகள் சமூகவலையில்
மனிதம் வாழ நேயம் தேவை
ஒற்றுமை ஒங்கின் உலகே மேன்மை
மனிதமாய் எழுவோம் மாண்பில் உயர்வோம்
இனமாய் ஒன்றி இலக்கில் வெல்வோம்
மனிதம் வாழ மறுவழி சமைப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading