நாடொப்பன செய்

நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென மனங்களும் குளிரும் போதினிலே
வில்லென வளையும் மனிதரும் கூடுவார்
சொல்லென நீயும் உபயோகப் படுத்தலிலே
கல்லென இருக்கும் மனமுமோ கரையுமே

நில்லென நிற்க்க வைக்கும் பண்பும்
தெளிந்த வானமாய் தேசமும் மகிழவே
கனிந்தனக் கருணையும் இணையாய் என்றுமே

துணிந்துமே துணைகளும் தூணாகவே சேருமே

பணிந்துமே கடமையும் பயனடைய வேண்டுமே

கணிக்கும் எண்ணத்தில் கருணையும் மிகையாகவே
திணிப்புக்கள் இன்றிய திருந்திடும் போதிலே
நாடொப்பன செய்திடு நாளும் இனிம்யே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading