களவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025

அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்

ஆடம்பரத்திற்காய் உயிரை பறித்து
அவமானத்தில் நொந்து வெந்து
நிரந்தர துயரைப் பெற்று
நெஞ்சினிலே நிம்மதியற்று

உழைக்காமல் உயர நினைத்தால்
உதாசினம் உன்னை நாடும்
சிறு திருட்டாய் தொடங்கி
சிறைச்சாலை அள்ளிச் செல்லும்

களவை ஒளிப்போம்
கண்டனம் செய்வோம்
வியர்வை சிந்தி உழைத்து
விளக்காய் ஒளிர்ந்து நிற்போம்

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading